Thanthai Periyar EV Ramasamy

Thanthai Periyar EV Ramasamy
1879-1973

Sunday 16 May 2010

நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம்

-தமிழக முதல்வர் கலைஞர்
posted by Mukilan Murugasan


சென்னை, மே 16_ இளைஞர்கள் நம்பிக்கை-யோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று முதல்வர் கலைஞர் கூறினார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மய்ய நோக்கப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை பல்-கலைக்கழகத்தில் சனிக்-கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் கலை-ஞர் குறுந்தகட்டை வெளியிட, அதை இசைக் கலைஞர் எல். சுப்பிர-மணியன் பெற்றுக் கொண்-டார். விழாவில் முதல்வர் கலைஞர் பேசிய-தாவது:


ரஹ்மானுடைய இசையை நான் எழுதிய வார்த்தைகளோடு குழைத்து நீங்களெல்லாம் பருகக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் எழுதிய பாடல் தான். ஆனால், தமிழகத்-தினுடைய புலவர்கள், சங்க காலத்து பெரு-மக்கள், சங்க காலத்திற்-குப் பின்னர் வந்த கடைச் சங்க காலம், இடைச் சங்க காலம் எனப் பல்-வேறு கால கட்டங்களில் வாழ்ந்த கம்பர், காள-மேகம் ஆகியோர் காலம் வரையில் எழுதப்பட்ட கவிதைகளை, அறிவுரை-களை, கொள்கைகளை, பண்பாட்டினை, தமிழர்-களுடைய பழக்க வழக்கங்களை எல்லாம் ஒரு பாட்டில் அமைத்து, அதை எழுதுவது எவ்-வளவு பெரிய இடர்பாடு கொண்டது என்பதை நன்கு அறிவேன். பாடலை எழுதும் போது அருகில் இருந்தவர்கள், இந்தப் பாடல் வெற்றி-கரமான பாடலாக வர வேண்டும் என்று எதிர்-பார்த்தார்கள். இந்தப் பாடலை எழுதும்போது ஏற்பட்ட உணர்வை நான் மட்டுமே அறிவேன். எனது வாழ்நாளில் 10, 12 ஆண்டுகளைத் தவிர்த்து மீதியுள்ள ஆண்-டுகள் எல்லாம் தமிழ், தமிழ் என்றுதான் என் உதடுகள் உச்சரித்-திருக்கின்றன. அதனால் யார் ஒருவர் தமிழ் என்று சொன்னாலும் திரும்பிப் பார்ப்பேன், ஒன்றிக் கலந்திடுவேன், உணர்வு-களை மதிப்பேன், அதனை மதிக்கின்றவர்-கள் எங்கிருந்தாலும் அவர்களை வாழ்த்து-வேன். தரணிவாழ் கலை-ஞர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நம் வீட்டுப் பிள்ளை ஏ.ஆர்.-ரஹ்மானுக்கு கிடைத்த பெருமைதான் ஆஸ்கார் விருதுகள். ரஹ்மானை போன்ற இளைஞர்கள் எப்படி முன்னேறி-னார்கள் என்பதைச் சிந்-தித்துப் பார்க்க வேண்-டும். அப்படிச் செய்தால் ஒவ்வொரு இளைஞனும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும். ஏனெனில், நம்பிக்கைதான் வாழ்வின் முதல் படி. அதில் கால் வைத்துவிட்டால் வெற்றி நிச்சயம்.

நம்பிக்கையோடு, நான் செலுத்திய உழைப்புதான் எனது முன்னேற்றத்-துக்குக் காரணம். அதே போல், ரஹ்மான் உலகப் புகழ் பெறுவதற்கு அவ-ரது நம்பிக்கை, இடை-விடாத முயற்சிதான். இது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் அல்ல. சமுதாயத்-தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் ஒரு உந்து சக்தியை ஏற்படுத்-தக் கூடியது. இந்த பாடல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்குகிறது. எல்லா உயிர்களும் பிறப்பால் ஒன்றுதான். பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றேதான் என்பதுதான் அதற்கு பொருள். பிறந்த பின் என்ன என்பதுதான் இன்றைக்கு உள்ள பிரச்சினை. பிறந்த பின் எல்லோரும் ஒரே குலம், ஒரே இனம் என்ற உணர்-வைப் பெற வேண்டும். எல்லாரும் ஒரே இனம் என்ற முத்திரையுடன் வாழ வேண்டும் என்ற வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. கோவை மாநாடே இந்தப் பாடலுடன்தான் ஆரம்பமாகும். இந்தப் பாடல் விளம்பரத்துக்கு பயன்படுத்தப்படும். நானே விளம்பரமாக இருந்து ஒவ்வொருவ-ரையும் மாநாட்டுக்கு அழைக்கின்றேன் என்-றார் முதல்வர் கலைஞர்.

அமைச்சர்கள் க. அன்பழகன், பரிதி இளம்-வழுதி, தலைமைச் செய-லர் கே.எஸ்.சிறீபதி, பாடகர் டி.எம்.சவுந்தர-ராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், திரைப்பட இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment