Thanthai Periyar EV Ramasamy

Thanthai Periyar EV Ramasamy
1879-1973

Friday, 14 May 2010

கடவுள் புரோக்கர்கள்


Unmai:May 1-15
posted by Mukilan Murugasan

ஏமாற்றிப்பிழைப்பதற்கு. எவ்வள-வோ வழிகள் உலகில் உண்டு.அது கால மாற்றத்திற்கேற்ப ஒவ்வொரு சீசனுக்கும் மாறுபடும். நாகரீகம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற காரணிகளால் ஏமாற்றுப்-பேர்வழிகளும் தங்களது உத்திகளை மாற்றிக்-கொள்வார்கள். ஆனால், ஆதிகாலம் தொட்டு ஒரு பொருளை முன்வைத்து ஒரு கும்பல் ஏய்த்துப்பிழைப்பது ஒன்று உண்டென்றால் அதுதான் கடவுளை வைத்துப் பிழைக்கும் சாமியார் வகையறாக்-கள்.



நிறுவனமயமாகப்பட்ட மதங்களில் இந்த சாமியார்கள் அதிகம். குறிப்பாக அர்த்த-முள்ள இந்து மதத்தில் சாமியார்-களை யாரும் கேள்வி-கேட்பது இல்லை. இதனாலேயே அவர்கள் தமது சுகபோக வாழ்வுக்கு எளிதாக சாமியார் வேடம் போடமுடிகிறது. பக்தர்கள் பலம்,அதிலும் அரசியல் மற்றும் அரசு நிருவாகத்தில் உள்ள அதிகாரிகள் ஆகிய பக்தர்கள் பலம் இந்த சாமியார்களுக்கு இருந்துவிட்டால் இவர்கள் மாட்டுவதில்லை. அறிவியல் வளார்ந்த இந்த காலக்-கட்டத்திலும் அதன் வசதிகளை எல்லாவிதத்திலும் பயன்-படுத்திக்கொண்டு மென்மேலும் தம்மை வளப்படுத்திக்-கொள்-கிறார்கள். ஆனால், அண்மையில் வளர்ந்துள்ள அறிவியல் தொழில்நுட்பம் இவர்களின் முகத்திரையைக் கிழித்து-விட்டது. இதில். இப்போது கடைசியாக மாட்டியவர் திருவண்ணாமலை ராஜசேகர் என்ற நித்யானந்தா.

இளம் வயதிலேயே சாமியார் வேடம் தரித்து ஒரு சில யோகாசன, தியான முறை-களைக் கற்றுக்கொண்டு அதனை மூலதன-மாக்கி மடம் அமைத்து கோடி கோடியாய் குவித்தவர் இந்த நித்யானந்தா. வெளியில் பிரம்மச்சரிய வேடமும், உள்ளே நடிகை-களுடன் கும்மாளமும் அடித்த இவரது ஆட்டத்தை ஒரு கேமரா படம்-பிடித்துவிட அது இந்திய துணைக்-கண்டத்-தையே உலுக்கிவிட்டது. ஆனால், இந்துத்து-வாக்கள் மட்டும் வாய்மூடியே இருந்தனர். அப்படி இருந்த-தோடு மட்டுமல்லாமல், அவரது சொத்துக்-களை காப்பாற்ற மறைமுக ஆலோ-சனைகளும் வழங்கியிருக்கிறார்கள். எப்படியும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவைத்-துவிடலாம் என்றுதான் அவர்கள் திட்டமிட்டு ஹரித்துவாருக்கு இந்த நித்தியானந்தாவை அனுப்-பிவைத்தார்கள். அது புண்ணிய-பூமியல்லவா? அங்கே கும்பமேளாவுக்காகக் குவிந்த காவி-களுடன் இந்த இளம் காவியும் இணைந்து மறைந்தும் திரிந்தது. வழக்கு கர்னாடகாவுக்கு மாற்றப்பட்டதுமே அது இந்த்துத்துவ பா.ஜ.க ஆளும் மாநில-மாதலால் நித்தியானந்தா எளிதாக தப்பிவிடுவார் என்றுதான் இதழ்க-ளெல்லாம் எழுதின. ஆயினும் முதலில் வெளியான பாலியல் முறைகேடு தவிர, நிதிமோசடி, கொலை-மிரட்டல், மத உணர்வை புண்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் இந்தியாவில் மட்டு-மல்லாமல், அமெரிக்காவில் உள்ள இவரது ஆசிரமம் தொடர்பாகவும் டக்ளஸ் மெக்கெல்லர் என்பவர் கலி-போர்னியா அட்டர்னி ஜெனரலிடம் புகார்கள் அளித்தது என குவிந்து கொண்-டேபோக வேறு-வழியில்லாமல் கர்நாடக காவல்துறை நித்யானந்தாவைத்தேடி இமாச்சலபிரதேசம் தேடி புறப்பட்டது. அங்கு உள்ள சோலன் மாவட்டம்,மாம்லிக் என்ற கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதமாக பதுங்கியிருந்த நித்யானந்தாவை காவலர்கள் ஏப்ரல் 21 அன்று கைது செய்தனர்.

இந்நிலையில், இவரது பிடதி ஆசிரமத்-திலும் சோதனையிடப்பட்டு அங்கிருந்து ஏராள-மான ஆவணங்களும் ,வீடியோ சி.டி.-க்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பெங்களூரு கொண்டுவரப்பட்டுள்ள நித்யானந்தா நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்-பட்டு போலிஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த இந்து மத சாமியாரின் நிலை இப்படி இருக்க இன்னொருபுறம் கிறித்துவ சாமியார்களான பாதிரியார்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அய்ந்து வருடங்களாக ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிரச்சினை, அமெரிக்காவை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. அதிர வைத்த சர்ச்சைகளின் நாயகன் தமிழக பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால். அமெரிக்காவில் உள்ள மினிசோட்டா நகரில் கிராக்ஸ்டன் தேவாலயத்தில் மூன்று வருட கான்ட்ராக்டில் (2004இல்) ஊழியம் செய்யச் சென்றவரே இந்த பாதிரியார்.

பெண்களிடம் இரக்கம் காட்டுவதுபோல் காட்டி, பின்பு சாதுரியமாக, அந்தப் பெண்களின் மகள்களைத் தன் வலையில் சிக்க வைத்திருக்கிறார். சில பாதிரியார்கள் எச்சரிக்கை செய்தபோது, அதனைக் கண்டு-கொள்ள வில்லையாம் ஜெயபால். 14,15 வயது பெண்களுடன் நெருக்கமாக இருந்ததாகவும், இரு பெண்களுடன் உல்லாசமாகச் சுற்றியதா-கவும் பேராய ஊழியர்களால் குற்றம் சாட்டப்-பட்டுள்ளாராம்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கு விஷயம் தெரிந்து, பிரச்சினையாகியுள்ளது. அக் குழந்தைகளின் பெற்றோர் அமெரிக்க பேராயர் விக்டர் பால்கேயிடம் புகார் கொடுத்-தனராம். இந்நிலையில், ஜெயபால் தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை என்ற காரணம் கூறி, இந்தியாவுக்குத் திரும்பி-விட்டாராம் (2005இல்). ஆரம்பநிலை விசாரணை-யின் போதே ஜெயபாலை உடனடி-யாக திருச்சபையில் இருந்து நீக்குங்கள் என்று விக்டர் பால்கே தமிழக பேராயருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்-தார்.

உதகை பேராயர் அந்தோணிசாமியோ, ஜெயபாலுக்கு, தக்க அறிவுரை கூறப்-பட்டுள்ளது. இனிமேல் யார் வம்புக்கும் போக-மாட்டார் என்று பதில் கடிதம் எழுதி அனுப்பினாராம். இதனால் கொதித்துப்-போன விக்டர் பால்கே, ரோம் மாநகரில் உள்ள வாடிகன் தலைமை-யகத்திற்கே கடிதம் ஒன்றினை அனுப்பி-னா. அக்கடிதத்தில், ஜெயபால் ஒரு பெண் பித்தர்; தேவாலயப் பணிகளுக்கே தகுதியற்றவர்; ஆசைக்கு இணங்காவிட்டால் உன் குடும்-பத்தையே அழித்துவிடுவேன்; நான் சொல்வ-தைச் செய்யாவிட்டால் தெய்வகுத்தம் என்றெல்லாம் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியதாகவும் விவரித்-துள்ளார்.

அமெரிக்க சட்டப்படி, மைனர் சிறுமியை பலாத்காரம் செய்தால் 35 வருட கடுங்காவல் தண்டனை உண்டு. தமிழகத்திலுள்ள கத்தோலிக்க திருச்சபையினர் உதவி செய்யத் தயங்கிய நிலையில், தாங்களாகவே முயற்சி-செய்து ஜெயபால் இருக்குமிடத்தைக் கண்டறிந்துள்ளது அமெரிக்க காவல்துறை. ஜெயபாலை நாடு கடத்தக் கோரி வாஷிங்டனிலுள்ள இந்திய தூதரகம், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், இந்திய வெளியுறவுத்துறை என்று எல்லோரும் ஒருமித்த குரல் கொடுக்க, தமிழகத்திலுள்ள பேராயர்களும் இதற்கு ஒப்புதல் அளித்-துள்ளார்கள்.

இப்படியொரு சூழ்நிலையில், -ஜயபால் தன் விவகாரத்தில் எல்லாம் வெறும் புகார்-களாகத்தானே இருக்கு. நான் தப்பு செய்திருந்-தால், அதற்கான ஆதாரங்களை அடிப்-படையாக வைத்து எஃப்.ஐ.ஆர், சம்மன் போன்ற விஷயங்கள் தயாராகி அவை-யெல்லாம் நம்ம நாட்டுக்கு வரட்டுமே. கோர்ட் சொல்லும்வரை நாம் நிரபராதி-தானே! என்று சாதாரணமாகக் கூறியுள்-ளாராம்!

மேலும் வேண்டுமென்றே பொய்ப்புகார்-களை எழுப்பி, தன் பெயரைக் கெடுப்பதாகக் கூறியதோடு இது பச்சை பிளாக்மெயில் என்றும் சொல்லியுள்ளாராம். ஜெயபாலுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாகக் கூறப்படும் ஊட்டி ஆயர் அமல்ராஜ்க்கு, ஜெயபாலை விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பி-வைக்கும்-படி சென்னை பேராயர் சின்னப்பா உத்தரவிட்டுள்ளாராம்.

உட்கட்சிப் பூசல் என்பதைப் போல மத உட்பூசலே (ப்ராட்டஸ்டண்ட், கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு இடையேயுள்ள பிளவே) தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்குக் காரணம் என்று விளக்கமும் அளித்-துள்ளார். இப்போது நித்யானந்தா கைதாகியிருக்-கிறார். இந்த ஜெயபாலின் கதி என்ன என்பது இன்னும் சில காலத்தில் தெரியவரலாம். மனித இன இயல்புக்கு மாறாக பிரம்மச்சரியம் என்பதை புனிதப்படுத்தி அதனை முன்வைத்து பிரச்சாரம் செய்து தமது மதத்திற்கு ஆள்பிடிக்-கின்றனர் மதவாதிகள். ஆனால், எதையும் மீறி மனித இயல்பு வெளிப்பட்டுவிடவே மதங்களின் புனிதக்-கட்டு-கள் உடைந்து விடுகின்றன.

கல்வியின் வாயிலாகவும், கடவுள்,மதம் தொடர்பான உண்மைகளை ஊடகங்களும் கற்பிக்கவேண்டும். சட்டமும், நீதியும் முறையாகச்-செயல்பட்டு தண்டிக்கவேண்டும். இல்லை-யென்றால் இந்த மோசடிப்-பேர்வழிகள் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள்.

No comments:

Post a Comment