மந்திரமா? தந்திரமா?
Periyar Pinju
posted by Mukilan Murugasan
சாமியார்களின் கையால் விபூதி கொடுத்தால், நோய்கள் குணமாகும், தொழில் பெருகும், பணம் கொழிக்கும், மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி அடைய முடியும் என்று தவறாக நம்பி, சாமியார்களிடம் சென்று, தான் உழைத்துச் சேர்த்த செல்வங்களை இழக்கின்றனர், சாமியார்களால் விபூதி, சிறிய லிங்கம் போன்றவைதான் வரவழைக்க முடியும் இதற்கு மேலான பெரிய பொருட்களை வரவழைக்க முடியாது. விபூதி என்னும் சாம்பலை, சாமியார்கள் எப்படி வரவழைக்கிறார்கள் என்பதைப் பார்ப்போமா?
வடித்த சோற்றின் கஞ்சியை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து அதனுடன் பக்திப் பரவசமூட்டும் வாசனை கலந்த விபூதியைச் சேர்த்துக் குழப்பி, பிசைந்து அக்கலவையை பட்டாணி போல சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வெயிலில் நன்றாகக் காய வைத்துக் கொள்வார்கள். பக்தர்கள் வரும்போது இந்த விபூதி உருண்டைகளை யாருக்கும் தெரியாதவாறு கையின் பெரு விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையில் வைத்துக் கொண்டு கை விரல்களைச் சேர்த்த நிலையில் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள், கை விரல் இடுக்கில் விபூதி உருண்டைகள் இருப்பது பக்தர்களுக்குத் தெரியாது. பிறகு மந்திரம் போடுவது போல் நடித்து வாயை முணு முணுத்து விரலிடுக்கில் மறைத்து வைத்திருக்கும் விபூதி உருண்டையை, கையின் விரல்களை மூடித் திறப்பது போல சைகை செய்து விபூதி உருண்டைகளை விரலின் நுனியில் கொண்டு வந்து விரலால் நசுக்கிக் கம கம வாசனையுடன் வெளியாகும் சாம்பல் விபூதியைப் பக்தர்களிடம் கொடுப்பார்கள் இதை உண்மையென நம்பி பக்தியில் ஊறிய பக்தர்களும் பெரிய பெரிய தொழில் அதிபர்களும் குனிந்து இரண்டு கைகளாலும் பவ்யமாக சாம்பலை வாங்கிப் பூசிக் கொண்டு, தன் உழைப்பால் அறிவால், முயற்சியால், சம்பாதித்த பணத்தை சாமியார்களிடம் காணிக்கை என்ற பெயரில் கொடுத்துவிட்டு, கூனிக் குறுகிக் கும்பிட்டுவிட்டு வருகின்றனர்.
இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம்-தானே தவிர மந்திரமல்ல. அன்புக் குழந்தைகளே! உங்களின் பெற்றோர்களிடம் கூறி அவர்களையும், இந்தச் சமுதாயத்தையும் விழிப்படையச் செய்யுங்கள்.
வெங்கட. இராசா.ம.பொடையூர்
Monday, 17 May 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment